heavy rain [file image]
வடதமிழக கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது அதைப்போல தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நேற்று மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்துள்ளது.
இதில் கடலூர் மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் பெய்த மழை நிலவரப்படி, கடந்த 130 ஆண்டுகளில் இல்லாத அளவாக தற்போது 13.6 செ.மீ. மழை பதிவக்கியுள்ளது. வரலாற்றில் இது 3- வது அதிகபட்ச மழை என்றும், இதற்கு முன்பு 19.7 செ.மீ. மற்றும் 15.3 செ.மீட்டர் மழை என பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைப்போல, திருச்சி மாவட்டத்தில் லால்குடி, கல்லக்குடி 6.4 மி. மீ, மண்ணச்சநல்லூர் வட்டத்திற்கு சமயபுரம் 3 மி.மீ, உட்பட்ட சிறுகுடி 6 மி. மீ புள்ளம்பாடி 3 மி. மீ என மழையின் அளவு பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இன்று (ஜனவரி 9) எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்ற விவரத்தை பார்ப்போம். அதன்படி, தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதைப்போல, தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நாளை (ஜனவரி 10)
தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை கனமழை பெய்யக்கூடும்.
ஜெய்ப்பூர் : ஆபரேஷன் சிந்தூர்க்கு ஆதரவு அளிக்கும் விதமாக, ஜெய்ப்பூரில் உள்ள இனிப்பகம் ஒன்று மைசூர் பாக், இனிப்புகளின் பெயர்களை…
சென்னை : நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவியின் விவாகரத்து செய்தி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
டெல்லி : கடந்த 21-ம் தேதி டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு 220 பேருடன் புறப்பட்ட 6E 2142 இண்டிகோ விமானம்…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த இரண்டு தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. இதனிடையே, அரபிக்கடலில் நிலவி வரும் குறைந்த…
டெல்லி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை (மே 24, 2025) நடைபெறவுள்ள நிதி…
இந்தியா vs பாகிஸ்தான் போர் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் அத்துமீறினால் நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம்…