8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்!

தொடர்ந்து மன்னர் வளைகுடா பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு வாரங்களுக்கு மேலாக தமிழகத்தின் பல்வேறு கடலோரா மாவட்டங்களில் புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பேசுகையில், மன்னர் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில நிலை கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
மேலும், இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்க கூடும் எனவும், இதன் காரணமாக கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் காரைக்கால் ஆகிய 8 பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழையும், சில இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளார். மேலும், கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025
கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!
April 30, 2025
“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!
April 30, 2025