நாளை 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

நேற்று தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் நிலவுகிறது. அதேபோல நேற்று தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இலங்கைக்கு தெற்கே நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்றும் அதே பகுதியில் நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை நீலகிரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் வரும் 7-ம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஓரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025