RAIN [File Image]
லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், பூஞ்சேரி, புதுப்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்துக்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது.
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை…
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…
லாகூர் : 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட்…
வாஷிங்டன்: அமெரிக்கா ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் செய்யும் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் உலக அரசியலையே திரும்பி பார்க்க…
சென்னை : காங்கிரஸ் கட்சி என்றாலே அதில் உட்கட்சி பிரச்சனை அதிகம் இருக்கும் என்பது தொடர்கதையாகி வருகிறது. அதனை வெளிக்காட்டும்…