தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் – இந்திய வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில், டிசம்பர் 2, 3 தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தென் கிழக்கு வங்ககடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 48 மணி நேரத்திற்குள் புயலாக வலுப்பெறும் என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் 4ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஏற்கனேவே சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழை எதிரொலியாக 4 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.