தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யக்கூடும்- வானிலை மையம்..!!
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில் வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் நீலகிரி, கோவை மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் நாளை வரை மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.11.07.2021 முதல் 12.07.2021 வரை மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் 40 முதல் 50 வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
10.07.2021 முதல் 13.07.2021 வரை தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் 40 முதல் 50 வேகத்திலும் இடை இடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீன்வர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு தகவல் தெரிவித்துள்ளது.