சென்னையில் கனமழை எதிரொலி – மாநகராட்சி நிர்வாகம் அதிரடி உத்தரவு
தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்னும் நேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என கூறப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 2-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும் என கூறப்பட்டுள்ளது. மிக்ஜாம் ( Michaung) என பெயரிடப்பட்ட இந்த புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீர்..! அடித்துச் செல்லப்பட்ட கார்..!
இந்த நிலையில், சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, சென்னை மக்கள் புகாரளிக்கும் வண்ணம் தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை திரும்பப் பெறும் வரை, பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சென்னையிலுள்ள அனைத்து பூங்காக்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.