கனமழை எதிரொலி : குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு! சுற்றுலா பயணிகளுக்கு குளிக்கத் தடை!
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி குற்றால அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக தென்காசி, செங்கோட்டை, மற்றும் மேற்கு தொடர்ச்சி மழை அடிவாரங்களில் உள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக குற்றாலத்திலும் கனமழை பெய்து வருவதால் அங்கு நீர்வரத்து அதிகரித்து திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத்தொடங்கியது. அதைத் தொடர்ந்து, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி என எல்லா அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பது நலன் கருதியும் முன்னயேற்படாகவும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும். அருவி பகுதிகளில் பலமான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025