தமிழகத்தில் மின்சார தேவையை குறைத்த கனமழை ..! மின்சார துறை ஹாப்பி ..!

சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த நிலையில் தமிழகம் முழுவதும் மின் உபயோகமானது உச்சத்தை எட்டியது. தமிழ்நாடு முழுவதும் மின் தேவை அதிகபட்சமாக 21,000 மெகா வாட்டாக அதிகரித்தது. அதற்க்கு முக்கிய காரணம் கோடை காலத்தில் வெயில் தாக்கத்தால் நம் வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சி தான்.
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் கோடை மழையானது பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் ஏசியின் பயன்பாடானது குறைந்துள்ளதை கண்டறிந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மின்சார உற்பத்திக்கான தேவையும் சற்று குறைந்துள்ளது என மின்சார துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அதாவது கடந்த மே 15-ம் தேதி மாலை ஒரு 7 மணி அளவில் 17,331 மெகாவாட்டாக மின் உற்பத்தி குறைந்துள்ளது.
அதனை தொடர்ந்து நேற்றைய நாளில் அதிகாலை பொழுதில் 13,831 மெகாவாட்டாக குறைந்தது. அதே போல நேற்று காலை 7 மணி அளவில் 14,709 மெகாவாட் அளவிற்கு சற்று கணிசமாக குறைந்துள்ளது. இதனால் 2 ஆயிரம் மெகாவாட் மின் தேவையும், ஒரு கோடி யூனிட் மின் நுகர்வும் தற்போது குறைந்துள்ளது என அதிகாரிகள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.
இதன் காரணாமாக அனல் மின்சார நிலையத்தின் மூலம் உற்பத்தியும் மின் உற்பத்தியும் குறைந்துள்ளது. மேலும், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மின் நுகர்வானது 40 கோடி யூனிட்டை தாண்டி இருந்த நிலையில் தற்போது 1 கோடி யூனிட் குறைந்துள்ளதாகவும் மின்சாரத்துறை அதிகாரிகள் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதனால், கோடை மழையின் காரணமாக தமிழக மக்களும், மின் உற்பத்தி குறைந்துள்ளதால் மின்சார துறையும் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025