ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.மேலும் மழை எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்,மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.