தூத்துக்குடி, கடலூர் மாவட்டங்களில் இந்த தேதியில் கனமழை வாய்ப்பு! வெதர்மேன் அலர்ட்!
ஜனவரி 10 முதல் 12 -ஆம் தேதி வரை இந்த குளிர்காலத்தில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பருவமழை பெய்யும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தொடர்ச்சியாக வானிலை தொடர்பான தகவலை மக்களுக்கு கொடுத்து வரும் நிலையில், அவரைப்போலவே டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தரும் தொடர்ச்சியாக அப்டேட்டுகளை கொடுத்துக்கொண்டு வருகிறார். அந்த வகையில், ஜனவரி 10-ஆம் தேதி தமிழகத்துக்கு மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்துள்ளார். அவர் கொடுத்த தகவலின் படி,..
லா நினா ஜனவரி நடுப்பகுதியில் இந்தியப் பெருங்கடலை வந்தடையும் என்பதால் பசிபிக் பெருங்கடலில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு ஜனவரி 10, 2024 முதல் தென் இந்திய தீபகற்பத்தில் மேம்பட்ட மழைப்பொழிவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு வங்காள விரிகுடாவின் பெரும்பகுதிக்கு, கடல் மேற்பரப்பு வெப்பநிலை 28 முதல் 29° வரை இருக்கும். இது அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் மழை பொழிவதை தெரியப்படுத்தும் ஒரு உதாரணம்.
எனவே, வரும் ஜனவரி 10-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதால் தமிழகம் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குளிர்காலத்தில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பருவமழை பெய்யும். சென்னை மற்றும் வட தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதில், குறிப்பாக டெல்டா மற்றும் தென் தமிழகம் (கடலூர் முதல் தூத்துக்குடி வரை) உள்ள மாவட்டங்களில் 2025 ஜனவரி 10-12 தேதிகளில் அதிக மழை பொழியும். குளிர்காலத்தில் வடகிழக்கு பருவமழையின் விரிவாக்கம் மற்றும் வழக்கத்திற்கு மாறாக அதிக ஜனவரி மழைப்பொழிவு ஆகியவை நெல் அறுவடையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அறுவடை தயாராக உள்ள இடங்களில், விவசாயிகள் விரைவாக அறுவடை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வயலில் அறுவடைக்கு தயாராக இருந்தாலும், லேசான மழை பெய்தாலும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவும் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தகவலை தெரிவித்துள்ளார். எனவே, விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
லா நினா என்றால் என்ன?
லா நினா (La Nina) என்பது பெரும்பாலும் உலகளவில் காலநிலை மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு புவி வானிலை நிலை. பசிபிக் பெருங்கடலில், லா நினா நிலை உருவாகும்போது, கடல் நீரின் வெப்பநிலை சாதாரணமாக குறைவதைக் குறிக்கின்றது. இது உலகின் பல பகுதிகளிலும் காலநிலை மாற்றங்களை ஏற்படுத்தும். லா நினாவின் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலும் அதிக மழை ஏற்படலாம். இது காய்கறிகள் மற்றும் தானியப் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம்.