நீலகிரி கோவையில் மிக கனமழை.! எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்.!
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அநேக இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது .
தற்போது வானிலை ஆய்வு மையம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதே போல, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாம்.
மேலும், புதுசேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.