[Image source : Getty Image]
தமிழகத்தில் நேற்று இரவு நேரத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இன்னும் 2 நாட்களுக்குகனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரத்தில் நேற்று பெய்த மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் சுற்று குறைந்து பொது மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. நேற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக இரவு நேரத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.
வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழையானது பெய்துள்ளது என்றும் இதன் காரணமாக மாநில முழுவதும் மழைக்கு சாதகமான சூழல் இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நேற்று மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது 60 இடங்களில் கனமழையும், 13 இடங்களில் மிக கனமழையும், மற்ற இடங்களில் மிதமான மழையும் பெய்துள்ளது.
அதே போல 2 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சிபகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதில், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார், அரியலுார், பெரம்பலுார், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…