தூத்துக்குடியில் கனமழை… அவசர உதவி எண்களை வெளியிட்டார் கனிமொழி எம்.பி!
தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, நேற்று காலை முதல் திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மிக கனமழையால், பல்வேறு இடங்கல் வெள்ளைக்காடாக காட்சியளிக்கிறது. பெரிதும் தாழ்வான பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் தென் தமிழகத்தில் இன்றும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும், பின்னர் படிப்படியாக மழை குறையும். குமரி கடல், அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக நீடிக்கிறது என்றும் இதனால் திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் கனமழை பெய்து வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் தரைக்காற்று 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே, தென் தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடியில் கனமழை பெய்துவரும் நிலையில் மழைக்கால அவசர உதவி எண்களை கனிமொழி எம்.பி வெளியிட்டுள்ளார்.
அவரது பதிவில், தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம். மருத்துவம், உணவு உள்ளிட்ட அவசர உதவிக்கு வாட்ஸ்ஆப் செயலி மூலம் தொடர்பு கொள்ளவும். உதவிட முன்வரும் தன்னார்வலர்களும் இதில் தங்களை இணைத்து கொள்ளலாம் என்றும் 80778 80779 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகிறோம்.
மருத்துவம், உணவு உள்ளிட்ட அவசர உதவிக்கு வாட்ஸ்ஆப் செயலி மூலம் தொடர்பு கொள்ளவும். உதவிட முன்வரும் தன்னார்வலர்களும் இதில் தங்களை இணைத்து கொள்ளலாம்.… pic.twitter.com/wQd7cxQdUf
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 18, 2023