திருவள்ளூர் சுற்றுவட்டாரா பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை!
கொரோனா வைரஸ் காரணமாக தற்போது 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல இடங்களில் மழை மூட்டமாக காணப்பட்டாலும் மழை பெய்யவில்லை. ஆனால் திருவள்ளூர் பூவிருந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை தற்போது பெய்து வருகிறது.
திருவள்ளூரில் உள்ள அம்பத்தூர் ஆவடி மற்றும் பட்டாபிராம் ஆகிய பகுதியிலும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை அடுத்த பூவிருந்தமல்லியில் மதுரவாயல், திருவேற்காடு, போரூர் மற்றும் குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.