உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி.! இந்த மாவட்டங்களில் கனமழை.!
23-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகும் என்று வானிலை மையம் புதிய தகவல் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் நவ. 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அதாவது, தென்மேற்கு வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், அடுத்த 24 மணி நேரத்தில் மதுரை, தேனி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தென்காசி, குமரி, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.