சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வரும் 15-ஆம் தேதி தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.
நவம்பர் 16 மற்றும் 17-ல் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதனிடைய, வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் 17ஆம் தேதி வரை மீனவர்கள் வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கில் நகர்ந்து காற்றழுத்த மண்டலமாக வலுவடையக்கூடும் என்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வாங்க கடலில் மத்திய கிழக்கு – தென் கிழக்கு பகுதியில் வரும் 15ம் தேதி வரை நீடிக்கும் என்றும் கூறியுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…