#BREAKING: அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 4 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
புதுச்சேரி வடக்கே 16 கி.மீ வேகத்தில் மையப்பகுதியை கடந்து வரும் நிவர் புயலால் 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நிவர் புயலால் அடுத்த 3 மணி நேரத்திற்கு கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தஞ்சை, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், சேலம், திருவாரூர், திருவள்ளூர், வேலூர், திருச்சி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகள் மிதமான மழை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூரில் நேற்று காலை 8.30 மணி முதல் இரவு 12.30 மணி வரை 24.2 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். புதுச்சேரி கடற்கரை பகுதியில் நிவர் புயலின் மையப்பகுதி 25% கரையை கடந்துள்ளது. கரையேறும் ஒரு சில பகுதிகளில் 145 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசி வருகிறது. நிவர் புயலின் எஞ்சியுள்ள பகுதி படிப்படியாக கரையை கடந்து வருகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.