தமிழகத்தில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு கனமழை – வானிலை மையம்..!

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக தென் மேற்கு பருவமழையின் தீவிரம் குறைந்து உள்ளது. மேலும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது.இதனால் பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.
இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகத்தை நோக்கி நகருவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் இரண்டு நாள்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
கடலூர் ,விழுப்புரம் ,திருவண்ணாமலை மற்றும் அரியலூர் போன்ற 17 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025