அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி – மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வ மையம் அறிவிப்பு.!
நேற்று இரவு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. இந்த மழையானது இன்றும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவித்துள்ளது.
அடுத்த 3 மணிநேரத்தில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் எனவும் , நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை தொடரும் எனவும், நெல்லை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு , காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை நிலவரப்படி , திருநெல்வேலி, தென்காசி , விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், நாகை மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.