#Breaking : தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை.! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
இன்றும் நாளையும் வடதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய கூடும். – வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்.
தமிழகத்தில் வடதமிழகம் பகுதிகளில் இன்றும் நாளையும் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை வலு குறையும் என்பதால், இன்று விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கனமழையும் ,
திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடஙக்ளில் கனமழை பெய்ய கூடும் எனவும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை வலு குறையும் என்பதால், ஆந்திர கடலோர பகுதிகள், இலங்கை ஒட்டிய கடலோர பகுதிகள், தமிழகம் மற்றும் புதுவை கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.