தமிழகத்தில் நவம்பர் 4 ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு மிக கனமழை வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் நவம்பர் 2-ஆம் தேதி வரை தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கடலூரில் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 3-ஆம் தேதி முதல் 4-ம் தேதி வரை குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் எனவும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்றும், நாளையும் குமரிக்கடல், மன்னர் வளைகுடா, தென்மேற்கு வங்கக் கடலில் பலத்த சூறாவளி வீசக்கூடும். இன்று முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை அரபிக்கடலில் தென்கிழக்குப் பகுதி, கேரள கடலோரம், லட்சத்தீவில் பலத்த சூறாவளி வீசும்.
நவம்பர் 4-ம் தேதி லட்சத் தீவு பகுதியில் பலத்த சூறாவளி வீசி வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி வீசுவதால் மீனவர்கள் அடுத்த நான்கு நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கடலோரப் பகுதி, அதை ஒட்டிய தென் தமிழகக் கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நீடிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…