சென்னையில் பல பகுதியில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை மாவட்டத்தில் பல பகுதிகளில் தற்போது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
சென்னை கனமழை
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில்,தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழையும், சில மாவட்டங்களில் மிதமான மழையும் சமீப நாட்களாக பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று ( அக்.30) சென்னை மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வடபழனி, சைதாப்பேட்டை, திருமங்கலம், ஆலந்தூர்,அசோக்நகர், கிண்டி, கோயம்பேடு,அரும்பாக்கம், தி.நகர் அண்ணாநகர்,ஈக்காட்டுத்தாங்கல், உள்ளிட்ட பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழைநிற்காமல் பெய்து வருவதன் காரணமாக அப்பகுதியில் இருக்கும் சாலைகளில் நீர் தேங்கி இருக்கிறது. இதனால் சாலையில் நடந்து மற்றும் வாகனத்தை ஒட்டி செல்வோர்கள் அவதியில் இருக்கிறார்கள்.
அடுத்த 24 மணி நேர வானிலை
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மீதமான வாய்ப்புகள் இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்து இருக்கிறது.
இன்று 16 மாவட்டங்களில் கனமழை
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் முன்னதாக அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.