திண்டுக்கல்லில் கனமழை : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
திண்டுக்கல்லில் பெய்து வரும் கனமழையின் எதிரொலியாக குதிரையாற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் : அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குதிரையாற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முதல் வெல்ல அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. பருவமழை தொடங்கி தமிழகத்தில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் தீவிரமடைந்து வரும் நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளையும் தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், திண்டுக்கல்லில் பழனி வட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு அமைந்துள்ள குதிரை அணியின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் அங்கு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெல்ல ஆபாய எச்சரிக்கையை பழனி உதவிசெயற்பொறியாளரான இரா.உதயகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “இன்று (15-10-2024) மாலை 4.30 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 80 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் குதிரையாற்றில் உபரி நீர் திறந்து விடப்படும். எனவே, குதிரையாற்றில் கரையோரப் பகுதிகளில் உள்ள பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறது”, என தெரிவிக்கப்பட்டுள்ளது.