சென்னையில் கனமழை! தண்டவாளத்தில் சூழ்ந்த மழைநீர் – மின்சார ரயில்கள் நிறுத்தம்!

ஃபெஞ்சல் புயல் காரணமாக தாம்பரம் ரயில்வே தண்டவாளத்தில் மழைநீர் தேங்கிய காரணத்தால் மின்சார ரயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

cyclonic storm fengal

சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள “ஃபெஞ்சல்” புயலானது மேற்கு திசையில் நகர்ந்து சென்னையிலிருந்து தென்கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாகவும், வடதமிழக – புதுவை கடற்கரையை காரைக்காலிற்கும் – மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே நாளை புயலாக கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்திருந்தது. இதனையடுத்து, சென்னை மாவட்டத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக, புயல், தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி கடல் போல் காட்சி அளிக்கிறது. அது மட்டுமன்றி பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியில் உள்ளனர். இந்நிலையில் சென்னை மீனம்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் செல்லும் ரயில் தண்டவாளத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் மின்சார ரயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

ரயில் நிறுத்தம் செய்யப்பட்ட காரணத்தால் ரயிலில் பயணம் செய்த நூற்றுக்கணக்கானோர் கீழே இறங்கி ரயில் தண்டவாளத்தில் நடந்து செல்கிறார்கள். ஆபத்தை உணராமல் அவர்கள் நடந்து செல்வது ஒரு பக்கம் கவலைக்கூறிய விஷயமாக பார்க்கப்பட்டாலும் ” செங்கல்பட்டு வர எப்படி போக முடியும் என்று தெரியவில்லை..முன் அறிவிப்பில் இதனை சொல்லி இருந்தால்  நாங்கள் கொஞ்சம் உஷாராக இருந்திருப்போம்” என்கிறார்கள்.

மேலும், இதைப்போலவே பலத்த காற்றால் சென்னை பூங்காநகர் பகுதியில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்துள்ளதாகவும் இதன் காரணமாக, கடற்கரை -தாம்பரம் இரு மார்க்கத்திலும் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த ரயில்களில் பயணம் செய்த பயணிகளும் கடும் அவதியை சந்தித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்