சென்னையில் கனமழை…மக்கள் மகிழ்ச்சி
சென்னையில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட மாவடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு சில தினங்களாகவே தமிழகமெங்கும் அநேக மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தலைநகர் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.அதன்படி சென்னையில் எழும்பூர், பாரிமுனை, கோயம்பேடு, வடபழனி, மெரினா, ராயப்பேட்டை, காசிமேடு, கோடம்பாக்கம், சூளைமேடு, ஐயப்பன்தாங்கல், வானகரம், வளசரவாக்கம், தாம்பரம், மதுரவாயல் உட்பட பல பகுதிகளில் தற்போது கன மழை பெய்து வருகிறது.