வானிலை ஆய்வு மண்டல மைய இயக்குனர் புவியரசன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். வெப்பசலனம் மற்றும் லேசான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறினார்.
இந்நிலையில் இன்று காலை சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. ராமாபுரம் ,பேரூர் ,வளசரவாக்கம் ,விருகம்பாக்கம் பள்ளிக்கரணை ,அயனாவரம் , பெசன்ட்நகர் ,வியாசர்பாடி ,நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது.
காற்றழுத்த தாழ்வு நிலையால் கோடம்பாக்கம் , கே .கே நகர் , அண்ணாநகர் ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது. பல்லாவரம் ,குரோம்பேட்டை ,தாம்பரம் , பெருங்களத்தூர் ,வண்டலூர் ,கிண்டிஆதம்பாக்கம் ,சூளைமேடு ஆகிய இடங்களில் ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் இன்னும் சில மணி நேரத்திற்கு கனமழை மற்றும் லேசான மழை விட்டு விட்டு பெய்துவரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.சாலைகளில் ஓடும் மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…