சென்னையில் காலையிலிருந்து வெளுத்து வாங்கி வரும் மழை..!
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றால் கனமழை பெய்து வருகிறது. இது வடகிழக்கு பருவமழை சூடுபிடித்துள்ளதை காட்டுவதாக வானிலை ஆய்வு மையங்கள் அறிவித்தனர்.,
தமிழகத்தில் கடந்த தினங்களால் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி வெள்ள காடாகக் காணப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வந்தது. நேற்றிய தினம் சென்னையில் உள்ள புறநகர் பகுதில் கன மழை கொட்டி தீர்த்தது. சென்னை புறநகர் பகுதியான கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், கொத்தேரி போன்ற இடங்களில் கனமழை பெய்தது . தாம்பரம், முடிச்சூர், வண்டலூர், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், கிண்டி , வேளச்சேரி, மடிப்பாக்கம், நங்கநல்லூர், மீனப்பாக்கம், போன்ற இடங்களில் அதிகாலை முதல் சாரல் மழை பெய்தது.
ஏற்கெனவே தாம்பரம் தண்ணீரில் மிதக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அது போல் காஞ்சிபுரம், வந்தவாசி பகுதிகளில் உள்ள ஏரிகள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.