9 மாவட்டங்களில் இன்று கனமழை.! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Published by
மணிகண்டன்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் மிதமானத மழை முதல் கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று இரவு வரையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

அதே போல வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் தனது செய்திக்குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு வினாடிக்கு 2,600 கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை.!

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (அக்டோபர் 31) மற்றும் நாளை (நவம்பர் 1)  ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

அடுத்து வரும் நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இன்றைய மழை நிலவரம் பொறுத்தவரை , தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவும் வரும் நவம்பர் 3ஆம் தேதி குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“பாஜக மாநிலத் தலைவர் பணிகள் எனக்கு இருக்காது!” அண்ணாமலை மீண்டும் திட்டவட்டம்!“பாஜக மாநிலத் தலைவர் பணிகள் எனக்கு இருக்காது!” அண்ணாமலை மீண்டும் திட்டவட்டம்!

“பாஜக மாநிலத் தலைவர் பணிகள் எனக்கு இருக்காது!” அண்ணாமலை மீண்டும் திட்டவட்டம்!

சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…

24 minutes ago
வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!

வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!

சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…

42 minutes ago
MIvsRCB : பும்ரா பந்துவீச்சை சமாளிப்பாரா கிங் கோலி? இதுவரை இத்தனை முறை அவுட்டா?MIvsRCB : பும்ரா பந்துவீச்சை சமாளிப்பாரா கிங் கோலி? இதுவரை இத்தனை முறை அவுட்டா?

MIvsRCB : பும்ரா பந்துவீச்சை சமாளிப்பாரா கிங் கோலி? இதுவரை இத்தனை முறை அவுட்டா?

மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…

1 hour ago

கலால் வரி மட்டும் தான் உயர்வு…”பெட்ரோல் & டீசல் ரேட் உயராது”..மத்திய அரசு விளக்கம்!

டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…

2 hours ago

பீகார் இளைஞர்கள் இடம்பெயரக் கூடாது! பேரணியில் ராகுல் காந்தி அட்வைஸ்!

பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…

2 hours ago

“யார் அந்த தியாகி? பதில் சொல்லுங்க முதலமைச்சரே.,” இபிஎஸ் சரமாரி கேள்வி!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…

3 hours ago