இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம்!

நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் க.வி.புவியரசன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.மேலும் திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென்கிழக்கு இலங்கை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும், வடக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், எனவே மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!
April 10, 2025
கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!
April 10, 2025