#HeavyRain: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வட தமிழக கடலோர பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய கூடும் என்றும்,மேலும் ஒரு சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.