விடாத அடைமழை… 2 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை… மேலும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு.!
நேற்றை போல, இன்றும் வானிலை ஆய்வு மையம், நீலகிரி, கோவைக்கு அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே அதிகமான இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
இந்த கனமழை எப்போது தான் தீருமோ என பொதுமக்களும் பார்த்து வருகின்றனர். அனால் விடாத கனமழை தொடர்ந்து பெய்து கொண்டேதான் இருக்கிறது.
இந்நிலையில், தற்போது வானிலை ஆய்வு மையம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில்நேற்றை போல இன்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுதுள்ளது.
அதே போல, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.