தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதுபோன்று நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளனர்.
நாளை மறுநாள் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.
மேலும், கர்நாடக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். குமரிக்கடல் பகுதிகளில் பலத்தகாற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…