தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை… அடுத்த 5 நாட்களுக்கு தொடரும்…
தமிழகத்தில் கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய உள்ளதாம். இந்த கனமழை அடுத்த 5 நாட்களுக்கு தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வெவ்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவ வருகிறது. இந்த மழை இன்னும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதாவது, தமிழகத்தில் கீழடுக்கு சுழற்சி காரணமாக, 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசியில் கனமழைக்கு அதிக வாய்ப்புள்ளது என்றும்,
கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருப்பூர் , தேனி, கரூர் , நாமக்கல் உள்ளிட்ட மொத்தமாக `13 மாவட்டங்களில் இந்த கனமழை இருக்கும் எனவும், இந்த கனமழை அடுத்த 5 நாட்களுக்கு தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள்ளது.