தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு.
ஆந்திரா கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று முதல் 3ம் தேதி வரை கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 29, 2022