தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மிதமான மழை பெய்து வருகிறது.சில வாரங்களாகவே கடும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் இருந்து வருகிறது.தற்போது மழை பெய்து வருவதால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில்,மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலூர், மதுரை, சிவகங்கை, நாமக்கல், வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது .சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025