24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு.., நாளை 7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு..!
நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் பலத்த மழை வாய்ப்புள்ளது.
1.5 கிலோ மீட்டர் உயரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழகத்தின் உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் மழை வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இன்று, நாளை புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் பலத்த மழை வாய்ப்புள்ளது.
வருகின்ற 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, உள் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் இதர மாவட்டங்களில், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் 18-ஆம் தேதி வரை வறண்ட வானிலை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு, வடபழனி, அரும்பாக்கம், தி.நகர், அண்ணாநகர், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.