குறைந்த காற்றுழத்த தாழ்வுப்பகுதியால் தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என அறிவிப்பு.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வரும் 31ம் தேதி வரை 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 17 செ.மீ மழை பதிவானது என்றும் அவிநாசி, கயத்தாறு, பரமக்குடி, தென்காசி மற்றும் பந்தநல்லூர் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ மழை பதிவானது என்றும் கூறியுள்ளது.
இதனிடையே, குறைந்த காற்றுழத்த தாழ்வுப்பகுதியால் மயிலாடுதுறை, நாகை, நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இதுபோன்று குமாரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் எனவும் கூறியுள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், செங்கல்பட்டு, சிவகங்கை, விழுப்புவதில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் இதர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும்.
மேலும், இன்று முதல் 30ம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல், தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரையிலும் அவ்வப்போது 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் நாளை முதல் 31வரை கேரள கடலோர பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…