தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை…இன்று 10 மாவட்டங்களுக்கு…வானிலை மையம் எச்சரிக்கை.!!
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும், இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், நாகை திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை,சென்னை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.