கனமழை எதிரொலி : நாளை இந்த 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, சென்னை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. சென்னையை போலவே, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.
இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்த நிலையில், நாளையும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என அறிவித்து இருந்தது.
எனவே, இந்த சூழலில், மாணவ, மாணவியர்கள் பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு செல்வது கடினம் என்பதால் நாளை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதைப்போல, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலுள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அத்தியாவசிய சேவை துறைகள் தவிர பிற அரசு அலுவலகங்களுக்கு நாளை (16.10.2024) விடுமுறை.
கனமழையையொட்டி தயார் நிலையில் நிவாரண மையங்கள் மற்றும் மீட்புப் பணி… pic.twitter.com/gfXqbNEtDl
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 15, 2024