“சென்னையில் பலத்த மழை”3 மணிநேரம் நீடிக்கும் வானிலை ஆய்வகம்..!!
தமிழகத்தில் வருகிற அக்டோபரில் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். இந்த நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்துள்ளது.
சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம், தி.நகர், கோடம்பாக்கம், கீழ்ப்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கே.கே. நகர், வில்லிவாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது.
இதேபோன்று கோயம்பேடு, வளசரவாக்கம், வானகரம், ஐயப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், கொளத்தூர், அமைந்தகரை, செங்குன்றம், பூவிருந்தவல்லி, அண்ணாநகர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என தகவல் தெரிவித்துள்ளது.
DINASUVADU