கனமழை பெய்ய வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்.!
- வரும் 20, 21-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உருவாகி வருகிறது.
- பருவ மழை முடிய இன்னும் 15 நாட்கள்தான் உள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் பருவ மழை தீவிரம் அடைந்ததால் சில இடங்களில் பரவலாக பல
மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் கேரள எல்லையை ஒட்டி நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்யும். சேலம், தர்மபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழை பெய்யக் கூடும்.சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வரும் 20, 21-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உருவாகி வருகிறது எனவும் பருவ மழை முடிய இன்னும் 15 நாட்கள்தான் உள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.