முக்கிய அறிக்கை: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று மழை வாய்ப்பு !
கடந்த சில நாட்களாக இந்தியாவில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக உத்திரபிரதேஷ், மாகராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பல்வேறு இடத்தில் கனமழை பெய்து வருகின்றது. அதுமட்டுமின்றி, இந்த கனமழையில் தினமும் பல உயிர் பலி நடிக்கிறது.
இந்நிலையில், இன்று தமிழகத்தில் 15 இடத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய தென் மாவட்டங்கள் மற்றும் கோவை, நீலகிரி ஆகிய மேற்கு மாவட்டங்கள் மற்றும் தஞ்சை ஆகிய டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.