இன்று இந்த 10 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்! வானிலை மையம் தகவல்!
விருதுநகர், திருப்பூர், நீலகிரி, உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதமே தொடங்கிய நிலையில், பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, திண்டுக்கல், திருச்சி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் கடந்த வாரம் முதல் கனமழை பெய்து வருகிறது. எனவே, தினம் தினம் எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது? என்பதற்கான விவரத்தை வானிலை ஆய்வு மையம் துல்லியமாக கொடுத்துக்கொண்டு வருகிறது.
அந்த வகையில், தற்போது இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்களை தெரிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஆகிய 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும். 4 மணி வரையில் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ஈரோடு, மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில்,அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.