நாளை சென்னைக்கு கனமழை அலர்ட்…மின்தடை ஏற்படும் இடங்களை குறிச்சி வச்சிக்கோங்க!
நாளை சென்னையில் தனபால் நகர், வெங்கடேசன் அலி தெரு, வீரராகவன் தெரு, உள்ளிட்ட பல இடங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கனமழை பெய்து வருவதால் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை கீழே பார்த்து குறித்துவைத்து கொள்ளுங்கள்…
சென்னை வானிலை
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு புயலாக வலுபெறவுள்ள காரணத்தால் சென்னையில் 26-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 29-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, கன மிக கனமழை பெய்யக்கூடும். வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், நாளை எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தையும் தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்
புதிய வண்ணாரப்பேட்டை: வடக்கு டெர்மினல் சாலை, டி.எச். சாலைப் பகுதி, திடீர் நகர், செரியன் நகர், சுடலை முத்து தெரு, அசோக் நகர், தேசிய நகர், நம்மையா மேஸ்திரி தெரு, புச்சம்மாள் தெரு, நாகூரான் தோட்டம், பாலகிருஷ்ணன் தெரு,
மீன்பிடித் துறைமுகம், தனபால் நகர், வெங்கடேசன் அலி தெரு, வீரராகவன் தெரு, எருசப்பா மேஸ்திரி தெரு, பூண்டிதங்கம்மாள் தெரு, ஏஇ கோயில் தெரு, ஆவூர் முத்தையா தெரு, ஒத்தவாடை தெரு, காந்தி தெரு, வரதராஜன் தெரு, மேட்டு தெரு, கிராமத் தெரு, குறுக்கு சாலை, சிவன் நகர், மங்கம்மாள் தோட்டம், ஜீவா நகர், எம்.பி.டி குவார்ட்டர்ஸ், ஏ.இ கோயில் தெரு ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.