களங்கத்தைத் தவிர்க்கும் கனமான முடிவு -முதல்வரின் அறிவிப்புக்கு திருமாவளவன் கருத்து
களங்கத்தைத் தவிர்க்கும் கனமான முடிவு என்று முதல்வரின் அறிவிப்புக்கு திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இரு மொழி கல்வி கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார் .தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்களின் உணர்வும், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகள், இரு மொழி கொள்கையை பின்பற்றுவதையே கொள்கையாக கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார். முதலமைச்சரின் கருத்துக்கு தமிழக அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்,எம்.பியுமான திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், இருமொழிகொள்கையே தமிழகம்ஏற்கும். தமிழக அரசின் இந்தமுடிவை விசிக வரவேற்கிறது. பொதுமக்களின் உணர்வுகளையும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையையும் ஏற்று தமிழக அரசு இந்த நிலைப்பாட்டை மேற்கொண்டிருப்பது பாராட்டுதலுக்குரியது. களங்கத்தைத் தவிர்க்கும் >கனமான முடிவு என்று முதலமைச்சர் அறிவிப்புக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
#இருமொழி_கொள்கையே
தமிழகம்ஏற்கும்: தமிழக அரசின் இந்தமுடிவை
விசிக வரவேற்கிறது. பொதுமக்களின் உணர்வுகளையும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையையும் ஏற்று தமிழக அரசு இந்த நிலைப்பாட்டை மேற்கொண்டிருப்பது பாராட்டுதலுக்குரியது.
களங்கத்தைத் தவிர்க்கும் #கனமான_முடிவு.
@CMOTamilNadu pic.twitter.com/t4oPHKWPRV— Thol. Thirumavalavan (@thirumaofficial) August 3, 2020