ஒருவரே எத்தனை தொகுதிகளுக்கும் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் – கமல்ஹாசனின் முக்கிய அறிவிப்பு.!
பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களே சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால், தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 24ம் தேதி முதல் மார்ச் 5ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் என்று அதிமுக தலைமை தெரிவித்திருந்தது. மேலும், தமிழ்நாட்டிற்கு ரூ.15,000, புதுச்சேரிக்கு ரூ.5000, கேரளாவிற்கு ரூ.2000 கட்டணத் தொகை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அதிமுகவை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த அறிக்கையில், இந்த தேர்தலில் வென்று மக்களுக்கு நேர்மையாக சேவை செய்ய முடியும் எனும் நம்பிக்கை உடையவர்கள் பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்றும் ஒருவரே எத்தனை தொகுதிகளுக்கும் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளார். மேலும் ஒரு தொகுதிக்கு ஒரு முறை விண்ணப்பிக்க ரூ.25,000 கட்டணத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை http://www.maiam.com/ என்று இணையதளம் மூலம் சுலபமாக விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
2021 தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.
# தலை _ நிமிரட்டும் _ தமிழகம் pic.twitter.com/tBC6Q60yCt— Kamal Haasan (@ikamalhaasan) February 15, 2021