தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அடுத்த 5 தினங்கள் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மழை
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று நாளை ஆகிய நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20 முதல் 22- ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்ப அலை
இன்று முதல் 20-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை நிலவரம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு
அமராவதி அணை (திருப்பூர்) 3,சூலூர் (கோயம்புத்தூர்), சூளகிரி (கிருஷ்ணகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), சின்னார் அணை (கிருஷ்ணகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி) தலா 2, கிளென்மோர்கன் (நீலகிரி), சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்), பல்லடம் (திருப்பூர்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), ஏற்காடு (சேலம்), கூடலூர் பஜார் (நீலகிரி), கெட்டி (நீலகிரி), கோயம்புத்தூர் விமான நிலையம், சின்கோனா (கோயம்புத்தூர்), ஒசூர் (கிருஷ்ணகிரி), பழனி (திண்டுக்கல்), கங்கவல்லி (சேலம்), பார்வூட் (நீலகிரி மாவட்டம்) தலா 1 செ.மீ பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம்…
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…
திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…
திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…
தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…