வெப்ப அலை அதிகரிக்கும்…5 நாட்களுக்கு மழை பெய்யும்..வானிலை மையம் தகவல்.!!

RAIN AND Summer

தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அடுத்த 5 தினங்கள் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

மழை 

மேற்கு திசை காற்று மற்றும்  வெப்ப சலனம் காரணமாக இன்று நாளை ஆகிய நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20 முதல் 22- ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்ப அலை 

இன்று முதல் 20-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை நிலவரம் 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு

அமராவதி அணை (திருப்பூர்) 3,சூலூர் (கோயம்புத்தூர்), சூளகிரி (கிருஷ்ணகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), சின்னார் அணை (கிருஷ்ணகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி) தலா 2, கிளென்மோர்கன் (நீலகிரி), சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்), பல்லடம் (திருப்பூர்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), ஏற்காடு (சேலம்), கூடலூர் பஜார் (நீலகிரி), கெட்டி (நீலகிரி), கோயம்புத்தூர் விமான நிலையம், சின்கோனா (கோயம்புத்தூர்), ஒசூர் (கிருஷ்ணகிரி), பழனி (திண்டுக்கல்), கங்கவல்லி (சேலம்), பார்வூட் (நீலகிரி மாவட்டம்) தலா 1 செ.மீ பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்