தமிழ்நாட்டில் தொடரும் வெப்பம்.! 13 இடங்களில் சதமடித்த வெயில்…

தமிழ்நாட்டில் கடந்த 5 நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டிய நிலையில் சென்னையில் 109 டிகிரியும், வேலூரில் 106 டிகிரியும் பதிவானது.
அதேபோல, இன்றும் வெப்பம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று மற்றும் நாளை ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
கனமழை:
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 21-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
பவர்பிளேக்கு முன்னாடி அவுட் ஆகுறீங்க… ரோஹித் ஷர்மாவுக்கு விமர்சித்து அட்வைஸ் கொடுத்த கவாஸ்கர்!
April 8, 2025